search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து தொடர்"

    இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் களமிறங்க உள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சாஹல் ஆகிய இருவருக்கும் இது முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் என்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. #ENGvIND

    இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மூன்று டி20 போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. நாளை முதல் டி20 போட்டி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியை தழுவியது.

    அப்போது, தோல்விக்கு கூறப்பட்ட முக்கிய காரணம் விரிஸ்ட் ஸ்பின்னர்கள் (மணிக்கட்டை சுழற்றி பந்து போடும் சுழற்பந்து வீச்சாளர்கள்) இல்லை என்பதே. அப்போது, அணியில் இருந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தற்போது பார்மில் இல்லாததால் ஒருநாள் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை.

    அவர்களுக்கு பதிலாக சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் அணியில் உள்ளனர். இவர்கள் இருவரையும்தான் கோலி மலைபோல நம்பியுள்ளார். இடைநிலை ஓவர்களில் நிச்சயமாக சுழற்பந்து வீச்சாளர்களால் விக்கெட் எடுக்க முடியும் என விராட் கோலி இங்கிலாந்து டூருக்கு கிளம்பும் முன்னர் கூறியிருந்தார். 

    இருந்தாலும், இங்கிலாந்து அணி தற்போதுதான் ஆஸ்திரேலியாவை 6-0 என்ற கணக்கில் அடித்து துவைத்தது. அதிலும், 481 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி உலக சாதனையும் படைத்தது. இந்த வெற்றி இந்திய அணியை சற்றே கலங்க வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதனால், எந்த இடத்திலும் சறுக்கிவிடக்கூடாது என்பதில் கோலி திட்டவட்டமாக உள்ளார். இந்த தொடர் அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக இருக்கும். தட்ப வெப்ப நிலை, ஆடுகளத்தின் தண்மை என அனைத்தையும் வீரர்கள் புரிந்து கொள்ளலாம்.

    இந்தாண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடரில் குல்தீப் யாதவ் 17 விக்கெட்டுகளையும், சாஹல் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தனர்.

    கடந்தாண்டு இந்திய அணியில் அறிமுகமான குல்தீப் யாதவ் விளையாடிய 20 ஒருநாள் போட்டியில் 15 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. அதேபோல, சாஹல் விளையாடிய 23 போட்டிகளில் இந்தியா 19 போட்டிகளில் வென்றுள்ளது. 

    இங்கிலாந்து அணியில் உள்ள பட்லர், ஜேசன் ராய், பைர்ஸ்டோ ஆகிய அதிரடி வீரர்களை குல்தீய், சாஹல் இணை வீழ்த்தும் என்ற நம்பிக்கை உள்ளது. 
    வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்துள்ளதால் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் குருணால் பாண்டியா இடம் பிடித்துள்ளார். #ENGvIND
    மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. டி20 தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்திருந்தார்.

    பயிற்சியின்போது வாஷிங்டன் சுந்தருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்குப் பதிலாக டி20 போட்டியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளரும், இடதுகை பேட்ஸ்மேனும் ஆன குருணால் பாண்டியா இடம்பிடித்துள்ளார். இவர் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் ஆவார். ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேல் இடம் பிடித்துள்ளார்.



    குருணால் பாண்டியா இந்திய அணியில் இடம் பிடித்தால் இர்பான் பதான், யூசுப் பதான் சகோதரர்களுக்கு அடுத்தபடி களம் இறங்கும் சகோதரர்கள் இவர்கள் ஆவார்கள்.
    யோ-யோ சோதனையில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் இருந்து நீக்கப்பட்ட அம்பதி ராயுடுவுக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #AmbatiRayudu #YoYotest #SureshRaina

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி, ஓவ்வொரு தொடரில் விளையாடுவதற்கு முன்பாகவும் வீரர்களுக்கு யோ-யோ சோதனை என்ற உடற்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டோனி, ரெய்னா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். இதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி மற்றும் இங்கிலாந்து உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க அவர்கள் தகுதிப்பெற்றனர். 

    இந்த சோதனையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி, இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற அம்பதி ராயுடு, குறைவான மதிப்பெண்களை பெற்று தோல்வியடைந்தார். இதனால் அவர் இங்கிலாந்து தொடரில் விளையாடு இந்திய அணியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். ராயுடு சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    இந்நிலையில், ராயுடுவுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் ஜூலை 3-ம் தேதி தொடங்க உள்ளது. 

    இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்: விராட் கோலி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.டோனி, தினேஷ் கார்த்திக், சஹால், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ். #AmbatiRayudu #YoYotest #SureshRaina
    இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்படும் யோ-யோ சோதனையில் அம்பதி ராயுடு தோல்வியடைந்ததால், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #AmbatiRayudu #YoYotest

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி, ஓவ்வொரு தொடரில் விளையாடுவதற்கு முன்பாகவும் வீரர்களுக்கு யோ-யோ சோதனை என்ற உடற்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. அதில் வீரர்கள் 16.3 என்ற மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே இந்திய அணியில் இடம்பெற முடியும். 

    இந்நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டோனி, ரெய்னா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். இதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி மற்றும் இங்கிலாந்து உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க அவர்கள் தகுதிப்பெற்றனர். 



    இந்த சோதனையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி, இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற அம்பதி ராயுடு, குறைவான மதிப்பெண்களை பெற்று தோல்வியடைந்தார். இதனால் அவர் இங்கிலாந்து தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ராயுடு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. #AmbatiRayudu #YoYotest
    ×